
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம்
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில், எதிர்வரும் 27 ம் திகதி சப்பறத் திருவிழாவும், 28 ம் திகதி தேர்த்திருவிழாவும், 29 ம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.