
வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 20 ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில் குறித்த போட்டியில் விராட் கோலி 17 ஓட்டங்களைப் பெற்றால், இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது.
விராட் கோலி இதுவரை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 12,983 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதில் 9 சதங்களும், 98 அரை சதங்களும் உள்ளடங்கும்.
மேலும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். அவர் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 14,562 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 13,610 ஓட்டங்களுடன் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் 13,557 ஓட்டங்களுடன் 3ஆவது இடத்திலும், கைரன் பொல்லார்ட் 13,537 ஓட்டங்களுடன் 4ஆவது இடத்திலும் உள்ளதுடன், விராட் கோலி 12,983 ஓட்டங்களுடன் 5ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்