வட்டவளை பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வட்டவளை – கரோலினா பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் தனியார் பேருந்தின் ஒரு பகுதி உடைந்து இரண்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்