வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தினுள் திருட்டு

-யாழ் நிருபர்-

நேற்று வெள்ளிக்கிழமை வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் புரட்டப்பட்டு தகடுகள் களவாடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம் பெற்ற பின்னர் ஆலயம் பூட்டப்பட்டது.

இந்நிலையில், இரவு இனந்தெரியாத நபர்கள் ஆலயத்துககுள் புகுந்து மூல விக்கிரகத்தை புரட்டி அதன் கீழிருந்த தகடுகளை திருடிச் சென்றுள்ளதுடன் திருப்பணி உண்டியலையும் உடைத்து களவாடியுள்ளனர்.

குறித்த ஆலயம் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மகாகும்பாபிசேஷம் இடம்பெற்ற நிலையில் குறித்த சம்பவம் தற்போது இடம் பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.