வடக்கு மாகாணத்துக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்
-யாழ் நிருபர்-
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனங்களை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று புதன்கிழமை நண்பகல் ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்