வடக்கு காஸா வைத்தியசாலைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்

காசா மீது 35வது நாளாக தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. அத்துடன், இதுவரை காசாவில் 4,500 சிறுவர்கள் உட்பட 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தத்துவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் பெண்கள் மற்றும் சிறார்களை தாக்குவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச தலைவர்கள் ஹமாஸ் படையினரையே கண்டிக்க வேண்டும் எனவும் இஸ்ரேலை கண்டிக்க அவசியம் இல்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்