Sri Lanka Tamil News Site

வகுப்பறையில் வைத்து 13 வயது மாணவி சகமாணவர்களால் பாலியல் வல்லூறவு : அதிர்ச்சி சம்பவம்

- Advertisement -

13 வயது மாணவியை சக மாணவர்கள் இருவர் வகுப்பறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாநகராட்சி , பாடசாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி கடந்த நவம்பர் 28ஆம் திகதி வகுப்பறையில் தனியாக இருந்துள்ள நிலையில் சக மாணவர்கள் அனைவரும் நடனப் பயிற்சிக்காக வெளியே சென்றுள்ளனர்.

மாணவி தனியாக இருப்பதை அதே வகுப்பில் படிக்கும் நான்கு மாணவர்கள் கவனித்துள்ளனர். இதில் இருவர் வகுப்பறைக்குள் சென்று கதவை மூடியுள்ளனர். ஏனைய இரு மாணவர்களை காவலுக்கு நிறுத்தி விட்டு , தனியாக இருந்த மாணவியை இரு மாணவர்களும் துன்புறுத்தி கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

- Advertisement -

இச்சம்பவம் குறித்து வெளியே சொல்லக் கூடாது என அந்த மாணவியை நான்கு மாணவர்களும் மிரட்டியுள்ளனர். வீட்டிற்கு சென்றதும் மாணவிக்கு வலி ஏற்படவே இந்த சம்பவம் குறித்து வீட்டாரிடம் கூறி அழுது முறையிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குற்றச் செயலில் ஈடுபட்ட இரு மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்தப் பள்ளி சிறையில் அடைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. வகுப்பறையில் வைத்து சக மாணவர்களின் இத்தகைய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

- Advertisement -