லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நுகேகொட நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் மனைவி ஆகியோரை ஆஜர்படுத்திய போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நுகேகொடை மிரிஹானையில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் இல்லத்தில் இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்