லொஹான் ரத்வத்தவிற்கு விளக்கமறியல்!
மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட அவர் இன்று சனிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்போது, அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கொள்ளுப்பிட்டிய சந்தியில் டிபெண்டர் ரக வாகனமொன்றைச் செலுத்தியபோது, எதிர்த்திசையில் பயணித்த காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.