லொறி ஒன்று ரயிலில் மோதி கோர விபத்து

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹா இந்துருவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்துருவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் கொஸ்கொடவில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்