லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

நாளை புதன்கிழமை எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது, என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, எதிர்வரும் நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும், இன்று செவ்வாய்க்கிழமை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் லிட்ரோ எரிவாயு விநியோகிக்கும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.