லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நிவர்த்திக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து முதற்தடவையாக கப்பலிலிருந்து கப்பலுக்குத் திரவப் பொருட்களைப் பரிமாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் கப்பலுக்கு இந்த திரவ வாயு பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு 3,170 மெற்றிக் டன் திரவ எரிவாயு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, விரைவில் நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.