ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்து: விசேட வர்த்தமானி
ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 425 கிராம் ரின் சூரை மற்றும் சால்மன் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் நிகர எடை கொண்ட கானாங்கெளுத்தியின் அதிகபட்ச சில்லறை விலை 180 ரூபாவாகும்.
மேலும், 425 கிராம் நிகர எடை கொண்ட பலா கானாங்கெளுத்தி சால்மன் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 560 ரூபாவாக இருக்கும் எனவும் குறித்த விலைகள் இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos