ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அயல் வீட்டார் உடனான முரண்பாட்டின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் – மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்