ரயில் மிதி பலகையில் நின்று பயணித்தவர்களின் நிலை

கொழும்பு – கோட்டையில் இருந்து பாணந்துறை நோக்கி நேற்று திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த ரயிலின் மிதிப் பலகையில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சுவரில் மோதியதில் குறித்த நால்வரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.