ரயில் பாதையில் சடலம் மீட்பு

கம்பஹா – அம்பேபுஸ்ஸ கெயின்தெனிய ரயில் பாதைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்தே கந்த அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த அறுபது வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை கிடைக்கபெற்ற தொலைபேசி அழைப்பின் பிரகாரம், கீனதெனிய அபேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகாமையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்