ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் நள்ளிரவு அடையாள வேலைநிறுத்தம்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ரயில்வே அதிகாரிகளுடன் இன்று காலை இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்துஇ அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார்.