ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் பலி
காலி – ரத்கம பிரதேசம், விஜேரத்ன மாவத்தை கடவையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை உயிரிழந்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்