Sri Lanka Tamil News Site

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

- Advertisement -

யாழ்.காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் உள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த மூதாட்டியின் தோட்டத்தில் தண்ணீர் இறைப்பதற்காக சென்ற ஒருவர், மூதாட்டி இரத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

- Advertisement -

குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வந்த, சாணை தவமணி (வயது 78) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்துள்ள மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அப்படியே இருக்கும் நிலையில், கொலைக்கான காரணத்தை கண்டறிய காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!