ரணிலும் சஜித்தும் ஒரு கூட்டணியிலா?
எதிர்வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கடுவலை மாநகர சபையின், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து அவர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு – ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்