ரணிலின் சந்திப்பை புறக்கணித்த தமிழ் பொதுக் கட்டமைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக் கட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்த போதிலும் பேச்சுவார்த்தைக்கான காரணம் தெரிவிக்கப்படாமையினால் நாம் தற்போது நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என பொதுக்கட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ பி ஆர் எல் எப் செயலாளர் நாயகமுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி செயலகத்திலிருந்து தமிழ் பொதுக் கட்டமைப்பினருடன் கலந்துரையாட வேண்டும் என்று அழைப்பு ஒன்று கிடைக்கப்பெற்று இருந்தது.
எனினும் என்ன காரணத்திற்காக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது என்று கேட்டபோது அது தொடர்பில் அவர்கள் உரிய பதிலை வழங்காததுடன் அறிந்து கூறுவதாக தெரிவித்திருந்தனர்.
ஆகவே இதுவரை அவர்கள் அதற்கான காரணத்தினை எமக்கு அறிவித்திருக்கவில்லை. இந்நிலையில் ஒரு திட்டமிடப்படாமல் நாம் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதில் அர்த்தம் இல்லை என்பதன் காரணமாக நாளைய சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக தகவல் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளோம்.” என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்