
யோஷிதவுடன் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை
கொழும்பு – கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்களைக் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினருக்கும் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து மோதல் ஏற்பட்டிருந்தது.