யூடியூப் மீட்டெடுக்கப்பட்டது

சைபர் தாக்குதல்களால் தாக்கப்பட்ட அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு தெரிவித்துள்ளது.

அரசாங்க அச்சகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இது இன்று மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.