யாழ். மாவட்ட காணி பதிவகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக நடைபெறாது

காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning) செயற்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளதால் 2024.11.25 தொடக்கம் 2024.11.27 (மூன்று நாட்களுக்கு) வரை துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் எதுவும் இடம்பெறாது என்பதுடன் சாதாரண சேவைகளில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கான பிரதிகள் நான்கு நாட்களின் பின்னரே வழங்கப்படும் என்பதனை மாவட்ட காணிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.