யாழ்.மாவட்டத்தில் லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழாவானது லங்கா சதொச சிரேஷ்ட முகாமையாளர் திரு.சஞ்சீவ வீர கொற்றகொட அவர்களின் தலைமையில் இன்று காலை பத்து மணியளவில் நாவற்குழியில் நடைபெற்றது .

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டதோடு, இவ் விற்பனை நிலையத்தின் மூலம் விரைவாக பொருட்களை பெற்றுக்கொள்ள முடிவதோடு, உள்ளூர் உற்பத்திகளையும் விற்பனை செய்யமுடியும்.

அத்தோடு மருந்துப் பொருட்களையும் களஞ்சியப்படுத்தி பரிமாற முடியுமெனவும் தெரிவித்தார்.

மேலும், இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன், பிரதேச செயலாளர்  உஷா சுபலிங்கம், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் சிவரூபன், சிரேஷ்ட கணக்காளர் திரு.டிலந்த பெரேரா (லங்கா ச.தொ.ச) மற்றும் மாவட்டச் செயலக பொறியியலாளர், உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.