யாழ். சிறைச்சாலையின் 103ஆவது அணியின் முன்மாதிரியான செயல்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் 103ஆவது அணியின் 3ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ்ப்பாண கடற்கரை சூழலானது நேற்றையதினம் சிரமதானம் செய்யப்பட்டது.

அத்துடன் குறித்த அணியின் நினைவு வெளியீடாக ரீசேட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சிறைச்சாலை அத்தியட்சகர் சீன.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.