யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 43ஆயிரத்து 682 பேர் பாதிப்பு!

 

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 12970 குடும்பங்களைச் சேர்ந்த 43ஆயிரத்து 682பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 129வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 5 உட்கட்டமைப்புகள் முழுமையாகவும், 4 உட்கட்டமைப்புகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. அத்துடன் அனர்த்தத்தால் ஒருவர் காயமடைந்துள்ளார்.

66 பாதுகாப்பு முகாம்களில் ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 793பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில்,

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 1303 குடும்பங்களைச் சேர்ந்த 4156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. 11 பாதுகாப்பு இடங்களில் 205 குடும்பங்களைச் சேர்ந்த 728பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 464 குடும்பங்களை சேர்ந்த 1462 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 829 குடும்பங்களை சேர்ந்த 2904 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் முழுமையாகவும், 61 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு இடங்களில் 396 குடும்பங்களைச் சேர்ந்த 1470பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 1090 குடும்பங்களைச் சேர்ந்த 3574பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 1359 குடும்பங்களை சேர்ந்த 4234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பாதுகாப்பு இடங்களில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 2164 குடும்பங்களை சேர்ந்த 7187 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஆறு வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன. 6 பாதுகாப்பு இடங்களில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 289 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 215 குடும்பங்களை சேர்ந்த 764 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் சிறு வர்த்தக நிலையம் ஒன்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 901 குடும்பங்களை சேர்ந்த 3171 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 6 பாதுகாப்பு இடங்களில் 368 குடும்பங்களைச் சேர்ந்த 1333 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1240 குடும்பங்களை சேர்ந்த 4023 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 2 பாதுகாப்பு இடங்களில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 126பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 1618 குடும்பங்களை சேர்ந்த 6020 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 8 பாதுகாப்பு இடங்களில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 490பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1113பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகள் பகுதியளவிலும், மூன்று சிறு வணிக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 339 குடும்பங்களைச் சேர்ந்த 1013பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஒரு சிறு வணிக நிலையமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் இரண்டு பாதுகாப்பு இடங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வேலணை பிரதேச செயலர் பிரிவில் 545 குடும்பங்களை சேர்ந்த 1866 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 8 பாதுகாப்பு இடங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 286 குடும்பங்களைச் சேர்ந்த 967பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 909 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3 பாதுகாப்பு இடங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.