யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 2035 குடும்பங்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2035 குடும்பங்களை சேர்ந்த 7416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில்,
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 288 குடும்பங்களைச் சேர்ந்த 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.
ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 215 குடும்பங்களை சேர்ந்த 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 574 குடும்பங்களை சேர்ந்த 2341 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 141 குடும்பங்களை சேர்ந்த 508 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 266 குடும்பங்களை சேர்ந்த 932 பேர் பல அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 73 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 470 குடும்பங்களை சேர்ந்த 1520 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.