யாழ்ப்பாணத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: இந்திய படகுகளின் மோசமான செயலே காரணம் – மீனவர்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள கஷுரினா, கோவலன் மற்றும் காரைநகர் கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான ஆமைகள் உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிர் இழந்த ஆமைகளின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி இந்திய படகுகள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனாலேயே இவ்வாறு ஆமைகள் உயிர் இழந்திருக்கின்றன என மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு காயமடைந்து கரை ஒதுங்கிய ஆமைகளில் உயிருடன் இருக்கும் ஆமைகளை கடற்படை மற்றும் மீனவர்கள் கடலில் விடுவித்துள்ளனர்.

இதேவேளை இந்திய படகுகளின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இலங்கை நாட்டின் பெறுமதி மிக்க வழங்கள் அழிந்து வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்