யாழ்ப்பாணத்தின் தற்போதைய அனர்த்த நிலவரம்!

-யாழ் நிருபர்-

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 இடைத்தங்கல் முகாம்களில், 268 குடும்பங்களைச் சேர்ந்த 1006 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில், 59 குடும்பங்களைச் சேர்ந்த 186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யா/கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில், 47 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு தங்கியுள்ள கற்பிபிணித் தாய்மார் மற்றும் வயோதிபர்களுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை தென்மராட்சி பிரதேசத்தின் அரச அலுவலகங்கள் மற்றும் வணக்க ஸ்தலங்களுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது.

சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் ஆலயங்களுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளது.

தற்போதைய நிலவர அறிக்கையின்படி (28.11.2024 – நண்பகல் 12.00 மணி வரையிலானது) யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, யாழ்ப்பாணம் முழுவதும் 17,095 குடும்பங்களைச் சேர்ந்த 56,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. 151 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் 80 பாதுகாப்பு நிலையங்களில் 1,995 குடும்பங்களைச் சேர்ந்த 7,063 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்