யாழில் மீனவ அமைப்பை சந்தித்த சீன உதவித் தூதுவர்!

-யாழ் நிருபர்-

யாழ். மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதிகளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் சந்தித்தார்.

குறித்த சந்திப்பில் சீனா நாட்டினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் மற்றும் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் வடக்கு மீனவ சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மீனவர்கள் முன்வைத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க