யாழில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் பரப்புரை கூட்டம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில்  ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்வு ஆரம்பமானது.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் நாமல் ராஜபக்சவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் பிரச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
குறித்த பிரச்சார நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஏனைய பகுதிகளை சேர்ந்த அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.