-யாழ் நிருபர்-
யாழ். வலயத்தில் ஆசிரியர் நியமனத்தின் போதும், அதிபர் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்திலே தொடர்ந்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தீவகம் தவிர்ந்த யாழ். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய வலயங்களிலே குறித்த அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
- Advertisement -
இவ்வாறான நிலையில் தற்போது முதற்கட்டமாக 27 அதிபர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் 27 பேரும் மேல்முறையீடு செய்திருப்பதாக அறிய வருகிறது.
இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கு அதிகாரிகளின் செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத குறித்த 47 பேரும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரனைத் தொடர்பு கொண்டபோது,
தாம் அதிபரிடம் மாற்றத்தில் உறுதியாக இருப்பதாகவும், சரியான மருத்துவ அறிக்கை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பரிசீலிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -