யாழில் ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்-

நாடு முழுவதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கின்றன.

நாட்டின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பிரச்சினை என பல பிரச்சனைகளுக்கு தீர்வினை வேண்டி, கோட்டாபய அரசுக்கு எதிராக, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.