Sri Lanka Tamil News Site

யாழில் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

- Advertisement -

-யாழ் நிருபர்-

யாழ். மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையினை அடுத்து அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான விடுதிகள் போராட்டக்காரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டன.

- Advertisement -

இந்நிலையில் இன்றும் அந்த பதற்றநிலை காணப்படும் பட்சத்தில் யாழிலுள்ள அங்கஜன் ராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது அலுவலகங்களுக்கு பாரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களைச் சூழ காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!