
ஆதரவற்ற யானை குட்டி பிரதேசவாசிகளால் மீட்பு
புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதம் மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
யானை குட்டி தற்போது புத்தளம் கால்நடை வைத்தியர்களின் பராமரிப்பில் இருப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்