யாகி சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வியட்நாமை தாக்கியுள்ள யாகி சூறாவளியை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 54 பேர் காணாமல் போயுள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான பாரிய இயற்கை அனர்த்த நிலைமையை வியட்நாம் எதிர்கொண்டுள்ளது.