மோதல் உயிரிழப்பு எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது, ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் ரசிகர்கள் பலர் உயிரிழந்தனர்.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
அப்போது இரண்டு அணி ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது, இந்த மோதல் வன்முறையாக மாறியது.
இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.