மோட்டி வைரஸ் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் மூன்றாவது மாபெரும் பட்டமளிப்பு விழா
மோட்டி வைரஸ் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் மூன்றாவது மாபெரும் பட்டமளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பிரதான அரங்கில் மோட்டி வைரஸ் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.எப் பஸீஹா பர்வீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி மஹிந்த ரூபசிங்க கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் உளவியல், உளவளத்துணை, தகவல் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி நெறி , வர்த்தக முகாமைத்துவம், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, ஆங்கில மொழி, சிங்கள மொழி போன்ற கற்கைநெறிகளுக்கான டிப்ளமோ சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன் சுமார் 400 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் இப் பட்டமளிப்பு விழாவில் மலேசியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து கல்விகற்ற மாணவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்