மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
கொழும்பு – ஹைவெல் வீதியின் பன்னிபிட்டிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிபிட்டிய பிராமணகம பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பத்தைந்து வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பன்னிப்பிட்டியவில் இருந்து கொட்டாவ நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பன்னிபிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வாகனம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பாரவூர்தியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்