வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன் மீண்டும் மாத்தறையை நோக்கி திரும்பும் போது பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்