மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் குடும்பஸ்தர் பலி

-அலுவலக நிருபர்-

மோட்டார் சைக்கிக்கிளில் சென்று கொண்டிருந்த போது மோட்டார், சைக்கிள் தீப்பிடித்ததில் குடும்பஸ்தர் பலியான சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூதூர் ஈச்சிலம்பற்று பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், இலங்கைத்துறை ஈச்சிலம்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வடிவேல் மாணிக்கராசா (வயது-40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒக்டாபர் மாதம் 29ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் , திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்த நிலையில் எரிகாயங்களுடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக , பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.