
மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து: ஒருவர் மரணம்
காலி – மாத்தறை பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்