மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
விபத்தில் ஆந்திரா பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரே உயிர் இழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வெங்காய வெடி பட்டாசுகளை எடுத்து சென்ற நிலையில் வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கிய போது ஏற்பட்ட அதிர்வால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.
இதேவேளை இந்த வெடி விபத்தில் 4 பேர் பலத்த காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் சி.சி.ரி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்