மொஹமட் ருஷ்டி பிணையில் விடுதலை!

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட ருஷ்டி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க