மொஹமட் பைசலின் சாரதி நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் கார் சாரதி மாரவில நீதவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வென்னப்புவ – கொஸ்வத்த ஹல்தடுவன பகுதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த கார் நேற்று மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போதுமோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்தார்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்று மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க