மொரட்டுவ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

கொழும்பு – மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த சுற்று வீதிப் பகுதியில் உள்ள கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க