மொட்டுவின் தலைவராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிய வருகிறது.
இதன் முதற் கட்டமாக நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இதன் பின்னர் பொதுஜன பெரமுனவின ஸ்தாபகரான பெசில் ராஜபக்ஷ இதுவரை செய்து வந்த கட்சியின் விரிவாக்கல் பணிகளை நாமல் ராஜபக்ஷ மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

நாட்டின் தற்போது பொருளாதார நெருக்கடியில் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக அந்தக் கட்சியை மறுசீரமைக்கும் அடிப்படை பொறுப்பு நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.