Sri Lanka Tamil News Site

மே 9 சம்பவத்துடன் தொடர்புடைய 1500 பேர் கைது

- Advertisement -

அலரி மாளிகைக்கு அருகிலான ‘மைனா கோ கம’ மற்றும் காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்ததான கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் இதுவரை 677 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -

இச்சம்பவங்கள் தொடர்பில் மேலும் புதிதாக 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இதுவரை இச்சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக நாடு முழுவதும் 847 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதுவரை 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் பொலிஸ் பிணை மற்றும் நீதிமன்ற பிணைகளில் 101 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 39 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

- Advertisement -