மே இறுதி வரை தொடரும்

தற்போதைய 5 மணி நேர மின்வெட்டு மே இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் புத்தாண்டு தினங்களில் மின் வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை.

அனல் மின் நிலையங்கள் முழுமையாக எரிபொருளைப் பெற்றபோதிலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மே மாதம் வரை குறைந்தது இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.